வவுனியாவில் மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை மறுதினம் கவனயீர்ப்புப் போராட்டம்

Report Print Theesan in சமூகம்

நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வர்த்தக சங்கத்தினரால் ஆதரவுப் போராட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நாளை மறுதினம்(24) காலை ஒன்பது மணியளவில் வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடுகள் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 25 நாட்களாக கேப்பாப்புலவு மக்கள் தமது நியாயமான கோரிக்கையினை முன்வைத்து மண் மீட்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு வழங்குவதுடன் வவுனியா வர்த்தகர் சங்கம் சார்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் தினச்சந்தை பகுதியில் மேற்கொள்ளவுள்ளோம்.

கேப்பாப்புலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குமாறு பொது அமைப்புக்கள், சங்கங்கள், இளைஞர்கள் அனைவரும் ஆதரவினை வழங்குமாறும் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை எமது சங்கப் பிரதிநிதிகளுடன் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்குச் சென்று அவர்களை சந்தித்து ஒரு தொகை உணவுப் பொதிகளையும் வழங்கவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Comments