21 இந்திய மீனவர்கள் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
9Shares

2017 ஆம் ஆண்டு இதுவரையில் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்திய மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 140 இந்திய மீனவர்கள் மாத்திரமே இலங்கை கடற்படையினரால் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய 29 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு 48 இந்திய படகுகளும், 220 மீனவர்களும், 2014 ஆம் ஆண்டு 100 படகுகளும், 477 மீனவர்களும், 2015 ஆம் ஆண்டு 43 படகுகளும், 273 மீனவர்களும், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments