மலையக மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி 10 இலட்சமாக அதிகரிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்
15Shares

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட நிதி உதவி தற்போது 10 இலட்சமாக ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக தற்போது ரூபா 6 இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்கப்படுகின்றது. இத்தொகையே ரூபா 10 இலட்டசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவியில், 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா நன்கொடையாகவும் எஞ்சிய 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா மாதாந்த தவணை அடிப்படையில் 15 ஆண்டுகளில் மீள செலுத்தக் கூடிய விதத்தில் கடனாகவும் அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மண்சரிவு அபாயத்தின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கும் வீட்டு நிர்மாணிப்பதற்கான தொகையை முழுமையாக வழற்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments