வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றக் கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா பல்கலைக்கழக மாணவர்களே குறித்த துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

எமது கோரிக்கைகளை ஏற்று வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்னி பல்கலைக்கழகமே எமக்கு அவசியம் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 28ஆம் திகதி மாபெரும் ஊர்வலம் ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் எனவும் குறித்த துண்டு பிரசுரத்தினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா வளாக ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள்,பொது அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments