வவுனியாவில் பன்றிக் காய்ச்சல்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Theesan in சமூகம்
21Shares

வவுனியாவில் கடந்த இரு தினங்களில் இருவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் இனங்காணப்பட்ட பன்றிக் காய்ச்சல் தொற்று இன்று வவுனியாவில் 25வயதுடைய குழந்தை பிரசவித்த பெண் ஒருவருக்கும், 37வயதுடைய பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் என இருவர் இனங்காணப்பட்டுள்ளது.

இந் நோய் தொற்று சிறுவர்களுக்கே அதிகம் ஏற்படுவதற்கு வாயப்புக்கள் உள்ளதால் சிறுவர்களை தேவையின்றி அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு வருவதைக் தவிர்த்துக் கொள்ளுமாறும் காய்ச்சல், தடிமன், உடல் சோர்வு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் வைத்தியசாலைப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments