கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் குளத்தில் நேற்றைய தினம் மீன்பிடியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் சிலரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வருகைத் தந்த சிலர் அவர்களை தாக்கியுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.