பகிடிவதை தொடர்பில் உடன் அறிவிக்க புதிய வசதி

Report Print Ramya in சமூகம்
42Shares

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய வசதியான ஒன்லைன் முறை மூலம் முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் வன்முறை, அச்சுறுத்தல் போன்ற முறைப்பாடுகளை ஒன்லைனில் பதிவு செய்யலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்லைன் முறை மூலம் முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்யப்படும் அனைத்து முறைப்பாடுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அவ்வாறு போலியான முறைப்பாடுகளை பதிவு செய்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எந்த ஒரு நபராலும் முறைப்பாடு பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்டுள்ள ugc.ac.Ik/rag என்ற வலைத்தளத்தில் பகிடிவதை, வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் போன்ற முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 0112-123700, 0112-123456என்ற அவசர தொலைத் தொடர்பு வசதிக்கு ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிடிவதை, பாலியல் துன்புறுத்தல், வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் ,கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் போன்ற முறைப்பாடுகளை ஒன்லைனில் பதிவுச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக சமூகத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், கல்விமான்கள், கல்விசாரா மற்றும் நிர்வாகம் ஊழியர்கள் ஆகியோர் முறைப்பாடுகளை ஒன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments