மட்டக்களப்பு - சாய்ந்தமருதில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கழுத்தில் எதிர்பாராத விதமாக புடவைத்துண்டு இறுகியதில் குறித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எட்டு வயதுடைய ஹஸைப் ரஷா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பாட்டியின் பராமரிப்பில் ஹஸைப் ரஷா என்ற சிறுவனும் அவரது இளைய சகோதரனுடன் இருந்துள்ளார்கள்.
இதில் ஹஸைப் ரஷா என்ற சிறுவன் தனது சகோதரனுடன் வீட்டின் மேல் மாடியில் சால்வைத்துண்டு ஒன்றை எடுத்து சுழற்றி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது தவறுதலாக புடவைத்துண்டு ஹஸைப் ரஷாவின் கழுத்தில் இறுகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.