மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் அரசு உண்மையானத் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்,
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதானி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது குறித்த கல்லூரிக்கு எதிரானர்களால்தான் மேற்கொள்ளப்பட்டதாக சிலர் கருத்துக்களை வெளியிட்டனர்.
அடையாளம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதனை செய்ய அரசு தவறுமாக இருந்தால் இதன் பின்னணியில் அரசு இருக்கின்றது எனும் சந்தேகமே ஏற்படும்.
இந்த சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டியது அரசின் கடப்பாடாகும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.