கொழும்பு - கணபதி பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த விளையாட்டு போட்டி இன்று(22) 2.00 மணியளவில் கிறேன்பாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிகழ்வில் அரச கரும மொழி அமைச்சர் மனோகணேசன், மேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஜெயந்த விக்ரமநாயக்க, முன்னாள் கல்வி பணிப்பாளர் ராஜரட்ணம், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.