சிறப்பாக இடம்பெற்ற மனைப்பொருளியல் அழகியல் காண்காட்சி

Report Print Ashik in சமூகம்
30Shares

முசலி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவினால் அரிப்பு மகளிர் நிலையத்தில் கடந்த ஒரு வருட காலம் மனைப்பொருளியல் டிப்ளோமா பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த பயிலுனர்களின் ஆக்கத்திறன்களை காட்சிப்படுத்தும் மனைப்பொருளியல் அழகியல் காண்காட்சி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த கண்காட்சி முசலி பிரதேசச் செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் முசலி கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எஸ்.ஹஸ்மி தலைமையில் இன்று(22) காலை அரிப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் மற்றும் அரிப்பு செங்கோல் மாதா ஆலய பங்குத் தந்தை அருட்தந்தை டெனி கலிஸ்ரஸ் ஆகியோர் இணைந்து மனைப்பொருளியல், அழகியல் காண்காட்சியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அத்துடன், கண்காட்சியில் முசலி உதவி பிரதேசச் செயலாளர் விக்கிரமசிங்க, மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ரங்கநாயகி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.

மனைப்பொருளியல், அழகியல் காண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு பரிசிலிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கண்காட்சியில் பயிலுனர்களின் ஆக்கத்திறன்களான தையல் வேலை, கை வேலை,பின்னல் வேலை,பெயின்ரிங் வேலை, மலர் ஒழுங்கமைப்பு, கேக் ஐசிங், சாரி வேலை உள்ளிட்ட பல்வேறு ஆக்கத்திறன்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Comments