கொழும்பு - விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
குறித்த விளையாட்டு போட்டி பாடசாலை அதிபர் சண்முகநாதன் தலைமையில் இன்று(22) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மேல் மாகாண உறுப்பினர் சண் குகவர்த்தன் மற்றும் அரசாங்க அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.