இராணுவத்தினர் மக்கள் மீது காட்டும் அலட்சியப் போக்கினை கண்டித்த வவுனியா வளாக ஆசிரியர் சங்கம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

இராணுவத்தினர் மீது மக்கள் காட்டும் அலட்சியப் போக்கினையும், இவற்றை கண்டு கொள்ளாதா அரசின் போக்கையும் யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வாளாக ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

குருமன்காட்டிலுள்ள பிரயோக விஞ்ஞான பீட வளாகத்தில் வவுனியா வளாக ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது கூட்டம் நேற்று(21) மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் தமது காணிகளை மீளப் பெறுவதிலுள்ள இடர்பாடுகளையும், அவர்கள் படும் அவலங்கள் தொடர்பாகவும், அவர்களின் சாத்வீகப் போராட்டம் தொடர்பாகவும் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் தெரிவிக்கையில்,

இடம்பெயர்ந்த கேப்பாபிலவு மக்களின் துன்பங்களையும், தொடர் உண்ணாவிரத போராட்டங்களையும், அரசு பாராமுகமாக உள்ள செயற்பாடுகளையும், அரசினால் நிறைவேற்றப்படாத வாக்குமூலங்களையும் கண்டு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

அந்த கிராமத்தோர் தங்கள் நிலங்களை அரசு விடுவித்துத் தருமென்று போர் முடிவு நிலைக்கு வந்து பல மாதங்கள் கடந்தும், இந்நாள் வரை காத்து நிற்கிறார்கள்.

இருப்பினும் போர் முடிந்த காலப்பகுதியான 2009 இல் இருந்து இன்று வரை அக்காணிகள் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் தான் இருந்து வருகின்றன.

இராணுவம், மக்களின் காணிகளை அபகரிப்பதில் ஆர்வம் காட்டுதல், அவற்றினை உருமாற்றுதல், மக்களின் வீடுகளை தரைமட்டமாக்குதல், அவற்றின் எல்லைக் கோடுகளை மாற்றுதல் இவ்வாறான செயற்பாடுகளையும், இராணுவத்தினர் மக்கள் மீது காட்டும் அலட்சியப் போக்கினையும், இவற்றை கண்டுகொள்ளாத அரசின் போக்கினையும் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

கேப்பாபிலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிப்பதில் உள்ள ஆர்வத்தினையும், தமது சொந்த மண்ணிற்கு திரும்புவதில் காட்டும் தீர்க்கமான முடிவினையும் கண்டு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் தலை வணங்குகின்றது.

கடந்த பல தசாப்தங்களாக போரிலே உடல், உள ரீதியாக துன்புற்று பல இடர்பாடுகளையும், இன்னல்களையும், அனுபவித்து எதுவுமே வேண்டாம் என்ற நிலையில் தற்போது சாதாரண ஒரு இலங்கை வாழ் கிராமத்தவர் போல எளிமை வாழ்க்கை வாழ விரும்பி நிற்கும்.

Comments