புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆறுதல் கூறிய சிங்கள சகோதரி..

Report Print Mohan Mohan in சமூகம்
988Shares

தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பலர் நேரில் சென்று பார்த்து கலந்துரையாடி வருகின்றனர். அந்த இடத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த மக்களும் சென்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அங்கு சென்ற சகோதர மொழி பேசக்கூடிய பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கேப்பாபிலவு கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் புதுகுடியிருப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கும் பல்வேறு தரப்பினர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தென்னிலங்கை மக்களும் ஆதரவு தெரிவித்து வருவதானது, நாட்டின் நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Like This Video...

Comments