கொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி

Report Print Thileepan Thileepan in சமூகம்

கொழும்பு இந்துக் கல்லூரியின் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

குறித்த விளையாட்டு போட்டி நிகழ்வு கல்லூரியின் அதிபர் பி.பரமேஸ்வரன் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

ஆரம்ப பிரிவு மாணவர்கள் உற்சாகத்துடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்ததுடன் விளையாட்டு நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, முதலாம் இடத்தினை வள்ளுவர் இல்லமும், இரண்டாம் இடத்தினை இளங்கோ இல்லமும், மூன்றாம் இடத்தினை பாரதி இல்லமும், நான்காம் இடத்தினை கம்பர் இல்லமும் பெற்றுக் கொண்டுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும், கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதிகள்,சிறப்பு அதிதிகள், கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Comments