மன்னாரில் எரிந்த நிலையில் முச்சக்கர வண்டி மீட்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையிலான முச்சக்கரவண்டி ஒன்றினை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சௌத்பார் கடற்கரைக்கு முன் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலேயே குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக எரிந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சௌத்பார் கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸார் முச்சக்கர வண்டியை மீட்டுள்ளனர்.

எனினும் குறித்த முச்சக்கர வண்டிக்கு யாரும் உரிமை கோரவில்லை எனவும், குறித்த முச்சக்கர வண்டி தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை எனவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த முச்சக்கர வண்டி வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments