மன்னாரில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

மன்னார் உப்புக்குளம் சந்தியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 4.42 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தார்.

சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments