சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு பேரணி

Report Print Ashik in சமூகம்

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி 'முற்காலத்தையும் அறிந்தவள் பலத்தினால் வெற்றி கொள்பவள்' எனும் தொணிப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று புதன் கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.

மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.


குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்ட செயலகம், மற்றும் பிரதேசச் செயலகங்களில் கடமையாற்றும் ஆண்கள், பெண்கள்,மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக மைதானத்தில் விசேட நிகழ்வு இடம் பெற்றது.

இதன்போது சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளர்களாக தொரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதோடு 2017ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டத்தின் சிறந்த சமூக சேவையாளருக்கான விருதை மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வு மையத்தின் இயக்குனர் அருட்சகோதரி ஜோசப்பிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய இந்த விருதை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments