வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி

Report Print Thileepan Thileepan in சமூகம்

மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாகுமாறு கோரி வவுனியா வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (02) காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்கவில்லை.


சிகிச்சைகளுக்காக வருகைத்தந்துள்ள நோயாளர்கள் பலரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதிகளின் சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய இணைப்பு

சைட்டம் வைத்திய நிறுவனத்திற்கு எதிராகவும் அதனை அரசுடமையாக்க வேண்டும் எனவும் தெரிவித்து வட மாகாண வைத்தியர்கள் இன்று வவுனியா பொது வைத்தியசாலையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதியம் 1 மணிக்கு வவுனியா , கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளை சேர்ந்த வைத்தியர்களே வவுனியா பொது வைத்தியசாலை வளாகத்தில் சைட்டம் வேண்டாம் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர்.

சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்துடன் ஒருநாள் பணி பகிஸ்கரிப்பிலும் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதி தீவிர சிகிச்சை பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளிலும் வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுவதனை பகிஸ்கரித்து வருகின்றனர்.

Comments