கூரிய ஆயுதங்களினால் நபரொருவர் வெட்டிக் கொலை

Report Print Kamel Kamel in சமூகம்
84Shares

கொகரல்ல பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுத்தத்தினால் தாக்கி கொலை செய்பய்பட்டுள்ளார்.

கொகரல்ல கொஸ்கஹாபிட்டிய மயானத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப்பாகமுவ பிடவத்த வீதியில் வசிக்கும் 47 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

நீதவான் விசாரணைகளுக்காக சடலம் அந்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும், கொகரல்ல பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ சேவையிலிருந்து விலகிக் கொண்ட நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், கூரிய ஆயுதங்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Comments