பெண்களுக்கு எச்சரிக்கை! மோசடி வர்த்தகம் கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்
1332Shares

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சர்ம கிரீம்கள் தொகை ஒன்று கொலன்னாவை களஞ்சிய அறை ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற வகையில் தருவிக்கப்பட்ட கிறீம்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாவாகும்.

சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மிகவும் குறைந்த தரத்தை கொண்ட இந்த கிறீம்களை கடைகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் சிறிய அளவிலான கிறீம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்படவிருந்த இந்த கிறீம் 350 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை செய்யப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இரகசியமாக கிறீம் விற்பனை செய்யும் இந்த மோசடி வர்த்தம் கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரி சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளளார்.

அந்த காலப்பகுதியினுள் எந்தளவு கிறீம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதென கணக்கிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பெண்களின் சுகாதாரத்தை கடுமையாக பாதிக்கும் இந்த கிறீம் வகைகளில் பாரியளவு விற்பனை செய்யப்படுவதற்கு முன்னர் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் தெரிவித்துள்ளார்.

Comments