மன்னார் மீனவர்களுக்கு ஒரு தொகுதி மீன்பிடி வலைகளை வழங்கி வைப்பு

Report Print Ashik in சமூகம்
21Shares

மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மீனவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மீன் மற்றும் நண்டு போன்ற கடல் உணவுகளை பிடிக்கும் வலைத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சவேரியார்புரம், மாளிகைப்பிட்டி, பேசலை, தலைமன்னார் பியர், தாழ்வுபாடு, வங்காலை போன்ற கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கே இவ்வாறு வலைத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனுடன் இணைந்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்பாளர் முஜாஹிரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வலைகள் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments