கற்பாறையால் பலியாகிய தனயன் மற்றும் தந்தை

Report Print Ramya in சமூகம்
115Shares

நுவரெலியா பகுதியில் கற்பாறை ஒன்று விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயதுடைய மகனும்,70 வயதுடைய தந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இருவரும் அவர்களது நிலத்தை சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படங்கள் இணைப்பு - திருமால்

Comments