விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் பெண்கள் உரிமையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Kumar in சமூகம்
45Shares

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களின் உரிமையினை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்றது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை உறுதிசெய், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினைவழங்கு ஆகிய தலைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இருந்துமாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது.

இதன்போது பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன்பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பெண்களின் உரிமையினை வலியுறுத்தியும்பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் தலைவர் செல்விமனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஊர்வலத்தில் அக்கட்சியின்பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Comments