விஹாரமாதேவி பூங்காவில் பவித்ராவுடன், மஹிந்த ராஜபக்ஸ

Report Print Shalini in சமூகம்
984Shares

கூட்டு எதிர்க்கட்சியின் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது மஹிந்த உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.

“தாயை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளிலான இந்த மகளிர் தினக் கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி வழி நடத்தியுள்ளார்.

இதில் பவித்ராவுடன் மஹிந்த, தினேஸ் குணவர்தன, ரோஹித அபேகுணவர்தன, குமார வெல்கம மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த இடத்தில் ஒன்று திரண்ட மகளிர், பெண்களுக்கு ஆதரவாக பல கோசங்களை எழுப்பியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சியும் இவர்களுடன் களத்தில் நின்று குரல் கொடுத்துள்ளார்.

Comments