சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
29Shares

வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு பல நிகழ்வுகள் நடைபெற்றன.

குறித்த நிகழ்வுகள் கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றதுடன் இதனை ஆசிரியர் பூ.சுத்தானந்தன் தொகுத்து வழங்கினார்.

இதேவேளை பெண் ஆசிரியைகளுக்கு, மாணவர்கள் மாலை அணிவித்தும் இனிப்புக்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் மாணவிகளுக்கு எழுது கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மகளிர் தினம் சம்பந்தமான விசேட உரையினை ஆசிரியர் க.குணரெத்தினம் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments