கிழக்கின் சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீடு பற்றிய உயர்மட்ட கலந்துரையாடல்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் 2016ஆம் ஆண்டு மேற்கொண்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திருகோணமலை காரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

2017ஆம் ஆண்டு கிழக்கு மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் 04 பிராந்தியங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாகவும் நிர்மாண வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

மேலும் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.

ஆலம்குளம், ஒலுவில், மூதூர், கிண்ணியா, பாலமுனை, வாழைச்சேனை, ஆரயம்பதி, சம்மாந்துறை உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் அடையாளம் காணப்பட்டு அதன் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவுள்ள நிதிகள் தொடர்பாகவும் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

மேலும் 11 வைத்தியசாலைகளுக்கு மத்தியரசினால் ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச்செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், சுகாதார அமைச்சின் பொறியியலாளர், மேலதிக மாகாணப்பணிப்பாளர், சமூக வைத்திய நிபுணர் திட்டமிடல் வைத்திய அதிகாரி, சுகாதார பணிப்பாளர்கள், பிராந்திய அலுவல பணிப்பாளர்கள், சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Comments