சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதிக் கல்விப்பணிப்பாளர் வி.நிதர்சினி தலைமையில் இன்று இந்த மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது வலயத்திலுள்ள பெண் அதிபர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், இதனை தொடர்ந்து பொதுக்கூட்டமொன்றும் இடம்பெற்றது.
மேலும், அங்கு மகளிர் தின உரைகள், பாடல்கள் மற்றும் கௌரவிப்புகள் என்பவையும் இடம்பெற்றன.