மனதை நெகிழ வைத்த இலங்கை வைத்தியரின் மனிதாபிமானம் : ஜேர்மன் மருத்துவர்

Report Print Ramya in சமூகம்
2793Shares

இலங்கை வைத்தியர் ஒருவரின் மனிதாபிமானம் தொடர்பில் சாமுவேல் ஹனெமான் என்ற ஜேர்மன் நாட்டு வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மஹரக அபேக்ஷா வைத்தியசாலையின் மருத்துவர் ரந்தில் பிரமோத் டீ அல்விஸ்ஸின் மனிதாபிமானம் தொடர்பிலேயே ஜேர்மன் வைத்தியர் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் கடந்த 3ஆம் திகதி குருநாகல் சென்றுக் கொண்டிருக்கும் போது அவரது காரில் மாடு ஒன்று மோதுண்டுள்ளது.

இதனால் அவரது கார் சேதமாகியது,காரின் சேதத்தை பொருட்படுத்தாமல் குறித்த மாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்காக குறித்த மருத்துவர் முயற்சித்துள்ளார்.

மாட்டின் கால் பகுதி காரில் நன்றாக மோதியதால், கொழும்பு தேசிய மருத்துவமனையின் தொழில்நுட்பவியலாளர் ஒருவரின் உதவியுடன் மாட்டிற்கு குறித்த வைத்தியர் சிகிச்சையளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் உள்ள மக்களின் இதயத்தில் ஆழமாக பதிவாகியுள்ளது. குறித்த வைத்தியரின் மனிதாபிமானம் தொடர்பிலான காணொளி தற்போது சமூக வலைத்தளங்கலில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments