பாட்டியுடன் இருந்த பச்சிளம் குழந்தை கிணற்றில் விழுந்து பரிதாபமாக மரணம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - லக்ஸபானா வீதி காத்தார் சின்னகுளம் பகுதியில் ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் லக்ஸபானா வீதி காத்தார் சின்னகுளம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் பிரவீனன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது குழந்தையின் தந்தையார் வேலைக்கும், தாயார் சுயவேலை காரணமாக நகரத்திற்கும் சென்றுள்ளார்கள்.

பாட்டியுடன் வீட்டில் தனியாக போது குழந்தை தவறி கிணற்றில் விழுந்து பலியானதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் முழுமையாக நிர்மாணிக்கப்படாத பாதுகாப்பற்ற கிணற்றிலேயே குழந்தை விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிசுவின் சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments