பெண்களைப் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது.
அதனை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் திருகோணமலை குளக்கோட்டன் பகுதியில் இன்று காலை இடம்பெற்றன.
சிறு கைத்தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட பெண்கள் தமது தொழில்துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் நிகழ்வாக இது இடம்பெற்றது.