முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த மக்கள் காணாமல் போன தமது பிள்ளைகளை கண்டறியும் வரை தமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இறுதியுத்தத்தின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் இந்த விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசு உடனடியாக கவனம் செலுத்தி தமது காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments