'மாற்றத்தினை ஏற்க துணிவோம்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின பேரணி யாழில் இன்று நடைபெற்றது.
கியூடெக் கரிதாஸ் மற்றும் சர்வமத சகவாழ்வு அரங்கமும் இணைந்து இந்த பேரணியினை ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த பேரணியானது, யாழ்ப்பாணம் பஸ்தியன் சந்தியில் இருந்து காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி அச்சகவீதி ஊடாக மத்தியூஸ் வீதி வழியாக கியூடெக் கரிதாஸ் நிறுவனத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில், ஆண்களைப் போன்று சமவுரிமை வழங்க வேண்டுமென்றும் இலங்கையில் பெண்களுக்கான உரிமை கிடைப்பதில்லை. அது வருத்தத்திற்குரியதென்றும், ஜேர்மனி நாட்டின் பெண் பிரதிநிதி தெரிவித்தார்.
மேலும் சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாக பெண்களுக்கான உரிமைகள், சமனாக வழங்கப்பட வேண்டுமென்றும்,வலியுறுத்தியுள்ளனர்.
விசேடமாக இந்த பேரணியில் வயோதிப பெண்மணிகள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.