வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தினம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
35Shares

வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களம் மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக நடைபெற்றது.

சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் சாதனைப் பெண்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை இந்த நிகழ்வில் கால் ஊனமுற்ற நிலையிலும் அதிஸ்டலாப சீட்டு டிக்கற்றுக்களை விற்பனை செய்து தன் தாய், தந்தையரை காப்பாற்றி வரும் செல்லையா சந்திரிக்கா மற்றும் கால் ஊனமுற்றாலும் தயிர் விற்று தன் தந்தையை காப்பாற்றி வரும் சங்கர் ஐயா சாரதா ஆகிய இருவருக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தம், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கெனடி, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், செயலாளார் மாணிக்கம் ஜெகன் மற்றும் செ.சபாநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Comments