ஹட்டனில் பெண்கள் தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
18Shares

2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனமான மொன்லாட் மற்றும் சார்ட் அமைப்பினரே மலையக பெண்கள் தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது ஹட்டன் டி.கே.டப்ளியூ கலாச்சார மண்டபத்தின் விசேட கூட்டம் ஒன்றினை நடத்திய இந்த அமைப்பு அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுடன் பெண்கள் உரிமை தொடர்பில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் பேரணியுடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இந்த கவனயீர்ப்பு பேரணி பகல் 01 மணியளவில் அட்டன் டி.கே.டப்ளியூ கலாச்சார மண்டபத்தின் அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு டன்பார் வீதியூடாக பிரதான நகரத்தை வந்தடைந்ததது.

இதன்போது இவ்வமைப்பின் இணைப்பாளர் டி.கணேசலிங்கம் கருத்து தெரிவித்ததாவது,

மலையக தோட்ட தொழிலாளர் பெண்கள் மற்றும் ஏனையவர்கள் தொழில் பிரச்சினை, காணி பிரச்சினை, சம்பள பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

விசேடமாக இப்பிரச்சினைகளுக்கு மலையக பெண்களும் ஏனைய தொழில் சார் பெண்களும் பாரியளவில் முகங்கொடுத்து வருவதனால் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக அரசாங்கத்திற்கும், உலக நாடுகளுக்கு வழியுறுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

Comments