வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 17வது நாளாகவும் தொடர்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி கடந்த 20ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு 17வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.