பூநகரியில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு

Report Print Suman Suman in சமூகம்
40Shares

பூநகரி வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மரக்குற்றிகள் வான் ஒன்றின் மூலம் வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட வேளையில் பூநகரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த மரக்குற்றிகளும், வானும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றர்.

Comments