காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் : பிரதமர் உறுதி

Report Print Vino in சமூகம்

காணாமல் போனோரின் அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த அலுவலகத்தினை அமைப்பதற்காக சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

அந்த வகையில் இந்த அலுவலகத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாததுக்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments