சிறுத்தைகளின் நடமாட்டத்தினால் அச்சத்தில் மக்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்
54Shares

வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒருமாத காலமாக இந்த கிராமத்தில் சிறுத்தை ஒன்று திரிவதாகவும், அச்சிறுத்தை இதுவரை மூன்று மாடுகளை கொன்றுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை நேற்று பகல் பசு ஒன்றினை சிறுத்தை தாக்கியதாகவும் அதனை கண்ட பொதுமக்கள் அதனை துரத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்வதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதுடன், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments