மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
புகையிரத நிலையத்திற்கு முன்னால் இருக்கும் ஒருவழிப்பாதையை மறித்து இலங்கையிலிருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த மாணவர்கள் அவரவர்களுடைய பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியாக வருகைத்தந்து புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஒன்றிணைந்து தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டதுடன், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தமது பூரண எதிர்ப்பை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.