கடலில் மிதந்து வந்த கஞ்சா : யாழில் சம்பவம்

Report Print Murali Murali in சமூகம்

யாழ். நயினா தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த ஒருதொகை கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

52 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இதனை மீட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த கஞ்சா போதைப் பொருளின் மொத்த நிறை குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நீரில் நனைந்திருப்பதன் காரணமாக அது கூடிய நிறையினை காட்டுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments