பாலியல் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர பெண் அரசியல்வாதிகள் வேண்டும்....

Report Print Kumar in சமூகம்
39Shares

பெண்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் பாலியல் கொடுமைகள் என்பவற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நேர்மையான பெண் அரசியல்வாதிகள் உருவாகவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று (08) நடைபெற்றுள்ளது.

இதன்போது, பெண்களின் உரிமையினை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலமும் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் கட்சியின் அலுவலகத்தில் பெண்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி உரையாற்றியுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

அன்று அவர்களால் முன் எடுக்கப்பட்டவிடயங்கள் பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்.

12 மணித்தியாலம் வரை வேலைக்குஅமர்த்தப்படும் பெண் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணித்தியாலமாக குறைக்கப்படவேண்டும்.

கல்வியிலும் சரி வேறுபட்டசாதனைகளிலும் சரி பெண்கள் ஆண்களிற்கு சமமானவர்கள். அரசியலிலும் , அரசதொழில்களிலும் பெண்கள் சமத்துவம் பெறவேண்டும் என்ற ஒரு முடிவினை திட்டவட்டமாக எடுத்தார்கள்.

ஆனால் இலங்கை சனத்தொகையில் 52 சதவீதமானபெண்கள் இருக்கின்றனர். அரசியலில் பெண்களின் பங்களிப்புமிகக் குறைவாக உள்ளது.

2017 ஆம் ஆண்டுஎமது இலங்கை அரசாங்கம் அரசியலில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீட்டைஒதுக்கி இருக்கின்றது.

இது வரை பாராளுமன்றத்தில் பெண்களின் அரசியல் வீதம் 02, மாகாணசபையில் பெண்களின் அரசியல் வீதம் 01, உள்ளூராட்சிமன்றங்களில் பெண்களின் அரசியல் வீதம் 2 ஆகும்.

ஆனால் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெண்களின் அரசியல் வீதம் 1.8 ஆகும். பெண்கள் வட்டாரரீதியாக தேர்தலில் களம் இறங்க முன்வரவேண்டும்.

அப்படி நீங்கள் எல்லா வட்டாரத்திலும் 1 ஆசனம் வீதம் வெற்றிபெற்று ஆசனங்களைக் கைப்பற்றினால் நாடுமுழுவதும்உள்ள உள்ளூராட்சிமன்றத்தில் 2450 பெண் அரசியல் உறுப்பினர்கள் வரலாம் எனவும், ஊழலற்றஅரசியல் தலைவர்களாகமாறலாம் எனவும் கூறியுள்ளார்.

காரணம் பெண்களில் அனேகமானவர்களுக்கு ஊழல் என்பதுதெரியாது.மற்றும் பெண்களுக்குநடக்கும் வன்முறைகள் சிறுவர் பெண்களுக்கானபாலியல் துஸ்பிரயோகம் பெண்களுக்குஎதிரானவீட்டுவன்முறைகளைப் போன்றபெரும்

கொடுமைகளுக்குகாலதாமதியாமல்அவ்விடத்திலேயேகடுமையானஉடனடிச் சட்டநடவடிக்கையை எடுக்கவைக்கலாம்.

இதுவரைக்கும் எத்தனையோபெரும் பாலியல் துஸ்பிரயோகங்கள் எமது இளம் யுவதிகளுக்குஏற்படுகின்றன. அவ்வளவு கொடுமைகளையும் செய்தகொடியமிருகங்கள் இன்று அரசியலில் இருந்துகொண்டுதங்களை நல்லவர்கள்

எனும் போர்வையைப் போர்த்திக்கொண்டுதாங்கள் மகான் எனநாடகம் ஆடுகின்றார்கள்.

இவர்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கவேண்டும் என்றால் நேர்மையானபெண் அரசியல் வாதிகள் உருவாகவேண்டும்.

இதைத்தான் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவரும் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சருமானகௌரவ சிவனேசதுரைசந்திரகாந்தன் ஆசைப்பட்டார்.

எமதுகட்சி 2009 ஆம் ஆண்டேஅரசியலில்பெண்களுக்கு 34 வீதஇட ஒதுக்கீட்டைவழங்கியது. வழங்கியஒதுக்கீட்டுச்சட்டத்தைபோலவேவேலைவாய்ப்பிலும் சரிநிதிபகிர்ந்தளிப்பதிலும் சரிமிகவும் நேர்மையாக நடந்துவந்தார் கௌரவதலைவர் பிள்ளையான் அவர்கள்.

இது வரைக்கும் எமது மட்டக்களப்பு பெண்கள் 3100 பேருக்கு வாழ்வாதார நிதிஉதவி வழங்கப்பட்டிருக்கின்றது.64 மாதர் கிராமஅபிவிருத்திச் சங்கங்களுக்கு 82 மில்லியன் ரூபாய் நிதியினை எனது சிபாரிசிற்கு அமைவாக வழங்கப்பட்டிருக்கின்றன.

எமது தலைவர் அவர்கள் கிழக்கின் முதலமைச்சராக இருந்தகாலங்களில் இன பேதம் பார்க்காமல் மூவினமக்களையும் ஒருங்கிணைத்துப் பல அபிவிருத்திவேலை திட்டங்களைசெய்துவந்தார்.

அவரின் தலைமையில் அபிவிருத்திவேலைத்திட்டங்கள் நடைபெறாதபிரதேசமோகிராமங்களோ இருக்கமுடியாது.

அதையாராலும் மறுக்கவோமறைக்கவோமுடியாது. ஒவ்வொருவீதிகளிலும் சரிகட்டடங்களிலும்சரி பஸ் தரிப்புநிலையங்களிலும் சரி அமைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை உடைக்கவும் முடியும் கழற்றவும் முடியும்.

ஆனால் வீதிகளையோ கட்டடங்களையோ பஸ் தரிப்பு நிலையங்களையோ உடைக்கமுடியாது.

மக்களுக்குத் தெரியும் யார் இது வரைகாலங்களில் மக்களுக்காக மக்களின் அபிவிருத்திக்காக சேவை ஆற்றியவர் என்பது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக கிழக்கில் அதாவது குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் பிரதேசங்களில் எந்த ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இடம்பெறவில்லை.

பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்தகாலங்களில் மட்டக்களப்புநகரத்தில் எதிர்கால இளைஞர் யுவதிகளின் நலன் கருதி ஒருநவீன முறையானவாசிகசாலையை அமைத்தார்.

அது 4 வருடகாலங்களாக முடிவுறாமல் கிடந்த நிலையில் அதற்கு 2016 ஆம் ஆண்டிற்கான அரச நிதி ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியினை அப்படியே சுருட்டி எடுத்துக்கொண்டு ஏறாவூரில் வடகிழக்கில் இல்லாத நவீனமுறையான வேலைத்திட்டம் முஸ்லிம் மக்களின் தேவைக்காக இடம்பெற்றுவருகின்றதாம் என்றுகேள்வி.

இதை எல்லாம் எமது தமிழ் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றார்கள்.

இவர்களை நாம் எமக்காக அரசியல் செய்வதற்கு அனுப்பினால் மாற்றானிடம் மண்டியிட்டு தமது அற்பசலுகைகளுக்காகவும் சுயநலத்திற்காகவும் சோரம் போகின்றார்கள்.

வெட்கித் தலைகுனிய வேண்டும். எமது தமிழ்ச் சமூகம் எந்தவொரு கால கட்டங்களிலும் மாற்று சமூகத்திடம் எமது உரிமையைப் பெற மண்டியிடக் கூடாது.

அதற்காக அன்று போர்க்களத்தில் போரிட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் தமது உறவுகளைப் பிரிந்து தமது உயிரை துச்சமாகஎண்ணாமல் உடல் பாகங்களை சிதற விட்டனர்.

பால் மணம் மாறாதபச்சிளம் பாலகர்கள் தமது தந்தையை இழந்தும் இளம் பெண்கள் தமது கணவனை இழந்து விதவைகளாகிதாயானவள் தன் உதிரத்தினால் உயிர் கொடுத்து ஈன்றெடுத்த தமது பிள்ளைகளை இழந்து ஆயிரக்கணக்கான உயிர்த் தியாகம் செய்தனர்.

காடையர்களின் காமவெறி தீரும் வரை எமது சகோதரிகள் கதறக் கதற கற்பழிக்கப்பட்டு இந்தக் கிழக்கு மாகாண தமிழர்களின் உரிமைக்காகப் வென்றெடுத்த இந்தக் கிழக்குமாகாண சபை இன்று ஒருவியர்வைத் துளி கூட சிந்தாதமாற்றான் கையில்.

இதற்குயார் காரணம். அன்று கிழக்கு மாகாண சபை தேர்தலின் முடிவுகள் வந்ததும் எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கங்கணம் கட்டி ஆடினார்கள்.

ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வந்தாலும் வரட்டும் பிள்ளையான் என்கின்ற கிழக்குப் போராளிவரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

கடந்த 60 வருடகாலங்களாகதங்களால் எந்தவொரு அபிவிருத்தியையும் காணாத கிழக்குத் தமிழர்கள் பிள்ளையான் ஊடாகவாபயன்பெறவேண்டும் என்பதுதான் அவர்களின்கேள்வி.

அதன் விளைவுதான் இன்று எமது கிழக்குத் தமிழ்ச் சமூகம் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாமல் படித்துப் பட்டம் பெற்றபட்டதாரிகள் குறிப்பாகப் பெண்கள் வேலை வாய்ப்பிற்காகதங்களின் கைக் குழந்தைகளுடன் வீதியில்

இறங்கிப் போராடிவேலைவாய்ப்பில்லாமல் கஸ்டத்தைஅனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

பட்டம் பெற்ற தமிழ் இளைஞர்கள் வீதியோரங்களில் சமைத்துச் சாப்பிடுகின்றார்கள். இவர்களுக்கான வேலைவாய்ப்பு எப்போதுகிடைக்கும்.

இதையெல்லாம் பொதுமக்களாகிய நீங்கள் தான் சிந்திக்கவேண்டும்.மக்களுக்காகசேவை செய்பவன் எங்கிருந்தாலும் அவன் அபிவிருத்திப் பணிதொடரும் என்பதற்கு எமதுகட்சித் தலைவர் கௌரவபிள்ளையான் அவர்கள் ஓர் உதாரணம்.

தனக்குக்கிடைக்கும் மாகாண நிதிஒதுக்கீட்டில் சிறையில் சந்தேகநபராகவாடிக் கொண்டிருக்கும் இந் நிலையிலும் மக்களுக்கானதனது அபிவிருத்திப் பணியினை செய்துகொண்டுதான் வருகின்றார்.

இதுவரைக்கும் அவருடையசிறைவாசம் ஒருவருடமும் ஐந்துமாதங்களாக இருந்தாலும் என் மூலமாகப் பெண்களின் வாழ்வாதாரத்தைமெருகூட்டுவதற்காக மகளீர் அமைப்புகளுக்கு நிதிவழங்கல் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

பிள்ளையான் அவர்களைத் அரசியல் பழிவாங்கல் மூலம்தான் சிறையில் அடைக்கமுடியும். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெண்களாகிய எமக்கு வட்டாரரீதியாகஅரசியலில் களமிறங்கக் கிடைத்த ஓர் நல்ல சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழலற்ற நேர்மையான பெண் அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவோம். நலிவுற்ற பெண் சமூகத்தை விழிப்படையச் செய்வோம் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் கூறியுள்ளார்.

இதேவேளை ,சமூகத்திற்கு சேவையாற்றிவரும் பெண்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஜோர்ஜ்பிள்ளை உட்பட பெருமளவான பெண்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments