நாளை வடமாகாண சபை முன் ஒன்று கூடுங்கள்! வேலையற்ற பட்டதாரிகளுக்கு அழைப்பு

Report Print Thamilin Tholan in சமூகம்
50Shares

வடமாகாண சபை முன்பாகக் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை காலை வடமாகாண சபைக்கு முன்பாக தங்களது கவனீர்ப்புப் போராட்டத்தை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மாகாணத்தின் அனைத்துப் பட்டதாரிகளையும் நாளை காலை 08 மணியளவில் வடமாகாண சபை முன்பாக ஒன்று கூடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து நாட்களாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பை வழங்கக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் தொடர்ச்சியாக அமைதி வழியில் போராடி வருகின்றனர்.

இன்றைய தினமும் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை வடக்கின் பட்டதாரிகள் மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக பதினோராம் நாளான நாளை (09) யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதன்போது பட்டதாரிகளின் பிரதிகள் அடங்கிய தொகுதியில் கையெழுத்துக்கள் பெறப்பட்டு வடக்கிலுள்ள பட்டதாரிகளின் மொத்த விபரங்கள் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆகவே, வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பட்டதாரிகளையும் நாளை காலை 08 மணியளவில் வடமாகாண சபை முன்பாக ஒன்று கூடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments