புதிய தேர்தல் சட்டத்தில் பெண்கள் போட்டியிடாமலே வெற்றிபெறமுடியும்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
61Shares

புதிய தேர்தல் சட்டத்தில் பெண்கள் போட்டியிடாமலே வெற்றிபெறமுடியும் என இலங்கைத் தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் முஹம்மட் தெரிவித்துள்ளார்.

மனித அபிவிருத்தி தாபனம் பெண்கள் ஒத்துழைப்பு முண்ணனி மற்றும் வேள்வி பெண்கள் அபிவிருத்தி முண்ணனி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை கல்முனை கிறீஸ்டா இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

16,1 ஆம் இலக்க புதிய உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தின்படி ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பாளர் பட்டியலில் கட்டாயம் 25வீதம் பெண்களை பட்டியலிடவேண்டும்.

இதன்படி சில தருணங்களில் பெண்கள் போட்டியிடாமலே வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.

நல்லாட்சியில் அது மேலும் வலுப்பறுள்ளதனால் இனிமேல் பெண்களின் முக்கியத்துவம் பங்களிப்பு என்பவற்றை பெரிதும் எதிர்பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் முஹம்மட் பதிலளித்துள்ளார்.

இந்த நிகழ்வு, வேள்வி பெண்கள் அமைப்பின் தலைவியும் தென்கிழக்கு பல்கழைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அனுசியா சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மனித அபிவிருத்தி தாபனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரும் பெண்கள் ஒத்துழைப்பு முண்ணனியின் பொதுச்செயலாளருமான பொ. லோகேஸ்வரி பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்விற்கு விசேட வளவாளராக இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்.எம் முஹம்மட் கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 25 வீத பெண் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு மற்றும் பெண் பிரதிதிநித்துவ ஒதுக்கீட்டிற்கான சட்ட ஏற்பாடுகள் எனும் தலைப்பில் விளக்கவுரையாற்றியுள்ளார்.

மனித அபிவிருத்தித்தாபன கிழக்கு மாகாணபணிப்பாளர் பொ.ஸ்ரீகாந்த் மேலதிக ஆணையாளர் முஹம்ட்டிற்கும், பெண்கள் உரிமை ஆர்வலர் லேகேஸ்வரி சிவப்பிரகாசத்திற்கும் பொன்னாடை போர்த்திக்கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக பிரதேச செயலாளர்கள் மற்றும் வலயக்கல்வி அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழு இணைப்பாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட சமய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Comments