மீன் வலையில் அகப்பட்ட 12 டொல்பின் மீன்கள் உயிரிழந்த சோகம்!

Report Print Nivetha in சமூகம்
156Shares

திருகோணமலை கடற்பரப்பில் இன்று (08) மாலை மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களது வலையில்அகப்பட்ட டொல்பின் மீன்கள் உயிரிழந்துள்ளன.

திருகோணமலை உட்துறைமுக பகுதியில் இலங்கை வங்கிக்கு எதிராக உள்ள கடற்பரப்பில் கரவலை வலைத்தவர்களது வலையில் 12 டொல்பின் மீன்கள் அகப்பட்டுள்ளது.

மீனவர்கள் வலையில் அகப்பட்ட மீன்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஒரு கயிற்றினால் கட்டி கடலினுள்விட்டுள்ளனர்.

எனினும் டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து ஸ்தலத்திற்கு வருகைதந்த திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவினர் உயிரிழந்த நிலையில் கட்டப்பட்டு கடலினுள் இருந்த டொல்பின்மீன்களை மீட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments