ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பான சர்ச்சை ஆராயப்படும்: செல்வம் அடைக்கலநாதன்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் அவசர கலந்துரைடயாடல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் கூட்டத்திற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர் குறித்த கூட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

ஜெனீவாவின் தீர்வு சம்பந்தமாகவும், தற்போது நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதுடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக நிச்சயம் ஆராயப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


you may like this..

Comments