புலம்பெயர் தாயக உறவுகளின் அமைப்பினால் உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு

Report Print Arivakam in சமூகம்

லண்டனில் உள்ள புலம்பெயர் தாயக உறவுகள் "ஓம் சரவணபகவா சேவா" அறக்கட்டளை நிதியத்தின் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி / முல்லைத்தீவு /வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும், மற்றும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த உதவித் திட்டங்கள் கடந்த 01, ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் "ஓம் சற்குரு சரவணபகவா சுவாமிகள்" நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கி வருகின்றார்.

அதன்படி இவ்வமையத்தினால் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கும், விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப பிள்ளைகளுக்குமாக மொத்தம் 55, இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கிளிநொச்சி வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் 50 மாணவர்களுக்கும் , கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமது நிதியுதவி திட்டத்தின் கீழாக மொத்தம் 360, துவிச்சக்கர வண்டிகளை இவ்வமைப்பு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments