கல்முனையில் குளுக்கோமா கண் நோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நடைபவனி!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரனின் வழிகாட்டலில் குளுக்கோமா கண் நோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நடைபவனி இடம்பெற்றுள்ளது.

குறித்த திட்டம் வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவின் வைத்தியநிபுணர் டாக்டர். அசேல கங்கெலி பொல தலைமையில் நேற்று(16) நடைபெற்றுள்ளது.

கல்முனை நகரில் ஆரம்பமாகிய விழிப்புணர்வூட்டல் நடைபவனி கல்முனை ஆதார வைத்தியசாலை வரை நடாத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கண்களுக்குப் புலப்படாத கண்களின் எதிரி குளுக்கோமா, குளுக்கோமா கண் பார்வையை குருடாக்கும், போன்ற பதாதைகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டியுள்ளனர்.

மேலும், இவ் விழிப்புணர்வூட்டல் நடைபவனியில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தாதியர் வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் அடங்கலாக பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

Comments