மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை நாம் 100 வீதம் நம்பியுள்ளோம்!

Report Print Kari in சமூகம்

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை நாம் 100 வீதம் நம்பியுள்ளோம். உண்மையில் அவர் எமக்கு ஒரு அப்பா போன்றவர் காரணம் இலங்கையின் வரலாற்றிலே ஒரு ஜனாதிபதி நலன் புரி முகாமுக்குல் வந்து நலன் விசாரித்தது மட்டும் இல்லாமல்,

எமது மக்கள் படும் துயரம் என்பவற்றை பக்கத்தில் இருந்து 'விசாரித்தவர் என்றால் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே. அவர் எம்முடைய உண்மை நிலையை அறிந்துள்ளார் என சுன்னாகம் கண்ணகி கிராமத்தில் முகாமில் வாழ்கின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.

வலி வடக்கில் உள்ள மயிலிட்டி கிராம மக்கள் 27 வருடங்களாக மீள் குடியேற்றாமல் தற்போதும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது நிலையை அறிய தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுபவ பகிர்வு வேலைத் திட்டம் இன்று பகல் 2.00 மணியளவில் 12 மாவட்டங்களை சேர்ந்த பல பிரதிநிதிகளுக்கும் வடக்கில் உள்ள முகாம் மக்களுக்கும் இடையில் சந்துப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுன்னாகம் கண்ணகி முகாவில் வாழ்ந்து வரும் மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இவ்வாறு கூறியுள்ளனர்.

அத்துடன், 150 குடும்பம் மயிலிட்டியில் இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ததாகவும் இன்று வரைக்கும் எமது நிலத்தையும் எமது மண்ணையும் எங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்கும் என நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

27 வருட முகாம் வாழ்க்கை என்பது எமது ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இருந்தும் நல்லாட்சியை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் இந்த அரசின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது.

எமது கிராமத்தில் பாரிய மீன் பிடித் துறைமுகம் மற்றும் சிமன்ட் தொழிற்சாலை பலாலி விமான நிலையம் பாரிய விவசாய பெரும் தோட்ட நிலங்கள் என்பன தற்போது பாதுகாப்பு படையிடம் உள்ளன.

எமது பிள்ளைகள் படிப்பில் நல்ல நிலையில் இருக்கின்றனர். இருந்தும் முகாமில் இருக்கின்றோம் என்பதனால் எம்மை புறக்கணிக்கின்றனர்.

எமக்கு ஏன் இந்த வாழ்க்கை. நாம் இந்த நாட்டின் பிரஜைகள். எமக்கும் எமது நிலத்தில் வாழ்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் உதவும் என நம்புகின்றோம்.

பெண்களுக்கு வாழ்கை ஒன்று எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கின்றது. அனைவரும் எம்மை வித்தியாசமாக பார்க்கின்றார்கள்.

மேலும், இது எமது நிலை ஒவ்வொறு விதத்திலும் இந்த முகாம் வாழ்கை எம்மை இந்த நாட்டின் பிரஜையாக வாழவிடுவதில்லை என அவர்களின் வேதனைகளை தெரிவித்துள்ளனர்.

Latest Offers

Comments