யாழில் காணி மீட்பு தொடர்பான இரண்டாம் நாள் கருத்தரங்கு

Report Print Kari in சமூகம்

யாழில் காணி மீட்பு தொடர்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்தரங்கு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

குறித்த கருத்தரங்கு யாழ் சுன்னாகம் திசா விடுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் சுன்னாகம் கண்ணகி கிராம நலன்புரி முகாமில் 27 வருடமாக மக்கள் படும் அவலம் தொடர்பான உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த கருத்தரங்கு நலன்புரி முகாமில் வாழ்கின்ற மக்களது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும், மக்களுக்கான காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க அரசிற்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments